பா.ம.க-விலிருந்து ஜி.கே.மணி அதிரடி நீக்கம்: அன்புமணி ராமதாஸ் உத்தரவு
பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஜி.கே.மணிக்கு கடந்த 18-ஆம் தேதி பா.ம.க ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கான விளக்கத்தை அளிக்க வழங்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் அமலுக்கு வரும் இந்த நீக்கத்தைத் தொடர்ந்து, ஜி.கே.மணியுடன் கட்சியினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பா.ம.க-வின் நீண்டகால முகமாக இருந்த ஜி.கே.மணியின் இந்த நீக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





