சர்பராஸ் கான் தந்தைக்கு ஜீப் பரிசளிக்க விரும்பும் ஆனந்த் மஹிந்திரா!
இந்தியா, இங்கிலாந்து இடையே ராஜ்கோட்டில் நடைப்பெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் சர்பராஸ் கான் சர்வேதச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
மிக பெரிய எதிர்பார்ப்பை அவரிடமிருந்து இந்திய அணியும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அவரது ஆட்டம் அமைந்திருந்தது.
சர்பராஸ் கானின் மிகச்சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் பவுலர்கள் திணறி வந்தனர்.
சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவின் ஒரு சிறிய தவறால் ரன் எடுக்க முயன்று ரன் அவுட் ஆகி வெளியேறினார். இவரது விக்கெட் விழுந்த போது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
இவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா அவர்கள் அவரது X வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்ததுடன் சர்பராஸ் கானின் தந்தை நவுஷாத் கானுக்கு மஹேந்திரா நிறுவனத்தின் விலையுர்ந்த “தார்” எனும் ஜீப்பை பரிசளிக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
சர்பராஸ் கானின் கதையை கேட்டறிந்த ஆனந்த் மஹிந்திரா அவர்கள், சர்பராஸ் கானின் கிரிக்கெட் பயணத்திற்கு அவரது அப்பா நவுஷாத் கான் ஆற்றிய பங்களிப்பை பார்த்து வியந்து இருக்கிறார்.
மேலும், அதை பெருமை சேர்க்கும் விதமாக அவருக்கு தார் ஜீப்பை பரிசளிக்க உள்ளார். ஆனந்த் மஹிந்திரா அவரது X வலைத்தளத்தில், “சர்பராஸ் கானின் வெற்றிக்கு கடின உழைப்பும், தைரியமும், பொறுமையும் மிக முக்கிய காரணமாகும்.
ஒரு தந்தையாக, ஒரு மகனுக்கு இந்த அளவுக்கு ஊக்கமளிக்க முடியுமென்றல், இதை விட ஒரு தந்தைக்கு சிறந்த குணங்கள் என்ன இருக்க முடியும்? ஒரு உத்வேகம் தரும் ஒரு பெற்றோராக சர்பராஸ் கானின் தந்தை நௌஷாத் கான் இருப்பதற்காக, மகேந்திர தார் ஜீப்பை பரிசாக ஏற்றுக்கொண்டால் அது எனது பாக்கியமும் மற்றும் கௌரவமும் ஆகும்.” என்று பதிவிட்டிருந்தார்.