ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பறந்த அவசரக் கடிதம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நான்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில், சமுர்த்தி மானியத்தை தொடர்வது, உர மானியத்தை தொடர்வது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பரவலாக்கப்பட்ட ஒதுக்கீட்டை மீள வழங்குவது, அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பின் போது வேலைவாய்ப்பை இழக்காதது போன்ற முன்மொழிவுகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் வறுமையை இல்லாதொழிப்பதற்கு சமுர்த்தி இயக்கமே சிறந்த பொறிமுறை எனவும் வேறு பெயர்களை கொண்டு அந்த இயக்கத்தை மாற்றுவது ஏற்புடையதல்ல எனவும் பொதுஜன பெரமுன அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது
(Visited 3 times, 1 visits today)