மின்கட்டணத் திருத்தம் தொடர்பில் கருத்துக்கூற பொதுமக்களுக்கும் வாய்ப்பு!

மின்கட்டணத் திருத்த யோசனை தொடர்பில் அடுத்த வாரம் முதல் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறியத் திட்டமிடப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டண திருத்த யோசனை, இலங்கை மின்சார சபையால் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மின்கட்டணத் திருத்தம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
(Visited 13 times, 1 visits today)