அம்பானியின் மகனின் திருமணத்தில் இலங்கை சமையல் கலைஞர்களுக்கு கிடைத்த வாய்ப்பு
உலக அளவில் பரபரப்பான பேச்சை உருவாக்கிய இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனத் அம்பானியின் திருமண விழாவிற்கு சமையல் செய்ய இலங்கையில் இருந்து 13 சமையல் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் சமையல் கலைஞர்கள் குழுவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
வாடிக்கையாளர் கருத்து மற்றும் கூகுள் மதிப்புரைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தக் குழுவை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த உணவகத்தில் இலங்கை சமையற்காரர்கள் இலங்கை உணவுகளை அதிநவீன முறைகளில் தயாரித்து பரிமாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச் 3 ஆம் தேதி திருமணத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.
ஆனால் தாங்கள் தயாரித்த உணவுக்கு கிடைத்த பதில்கள் மற்றும் பாராட்டுக்களின் அடிப்படையில், மார்ச் 4 ஆம் திகதி நிகழ்விற்கான இரவு உணவை கூடுதல் நாளாக தயார் செய்யும் பொறுப்பும் வாய்ப்பும் இந்த இலங்கை சமையல் கலைஞர்களுக்கு கிடைத்தது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள “ஜாம்” நகரில் உள்ள அம்பானிக்கு சொந்தமான தனியார் உயிரியல் பூங்காவில் திருமண விழா நடைபெற்றுள்ளது.
இந்த திருமண வைபவத்திற்கு இலங்கை சமையற்காரர்களுக்கு மேலதிகமாக இங்கிலாந்து, டுபாய், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்களும் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.