இந்தியா செய்தி

மதுரை மீனாட்சி கோவிலில் நடிகை நமீதாவிடம் மத சான்றிதழ் கேட்ட அதிகாரி

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நமீதா. தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் நமீதா அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

பிறகு நமீதாவிற்கு சினிமா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இவர் 2017 ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில்,மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என நடிகை நமீதா குற்றம் சாட்டி காணொலி வெளியிட்டுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நமீதா தனது கணவருடன் தரிசனத்திற்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவரை தடுத்து நிறுத்திய அதிகாரி நமீதா இந்து என்பதற்கான சான்றிதழ் காண்பிக்குமாறு கூறியதாகவும், தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் கூறி நடிகை நமீதா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு கோரிக்கை விடுத்து குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

(Visited 34 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!