இலங்கை – பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் படுகொலை!

பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் ஒரு கைதி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு கைதி கூறிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்தக் கொலையை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒரு கைதி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இறந்தவர் சிவா என்ற கைதி என்றும், அவரது உடலில் சுமார் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பூசா சிறைச்சாலையில் ஒரு முழுமையான சோதனை நடத்தப்பட்டது, இதன் போது ஏராளமான ரவுட்டர்கள் மற்றும் மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், இந்தக் கொலைக்கும் அந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், இல்லையென்றால், போதைப்பொருள் சம்பவம் கொலைக்கு வழிவகுத்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.