செய்தி வட அமெரிக்கா

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த தமிழர் மரணம்

கனடாவின் – Mississauga நகரில் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் நடந்த வாகன விபத்தில் காயமடைந்த தமிழர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த விபத்து Mavis & Hwy 407 சந்திப்புக்கு அருகாமையில் இந்த மாதம் 4ஆம் திகதி அதிகாலை நிகழ்ந்தது. சின்னராசா சர்வேந்திரராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் , வசாவிளானை பிறப்பிடமாக கொண்டவராவார். விபத்தில் படுகாயமடைந்த நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் சின்னராசா சர்வேந்திரராஜா உயிரிழந்துள்ளதான குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த இரண்டாவது வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து Peel பிராந்திய காவல்துறையினர் உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதனையும் வெளியிடவில்லை.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!