ஜெர்மனியில் உதவி பணம் அதிகரிப்பு? விடுக்கப்பட்ட கோரிக்கை
ஜெர்மனியில் உதவி பணம் அதிகரிப்பட வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
சமூக உதவி பணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகக்குறைந்தது 100 யுரோ வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள அதி உயர்வான பணவீக்கம் காரணமாக சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்கள் தமது நாளாந்த செலவுகளை ஈடு செய்வதில் சிரமத்தை எதிர் கொள்கின்றார்கள்.
இதனை ஈடுசெய்வதற்காக மாதம் ஒன்றுக்கு தலா 100 யூரோக்களை வழங்க வேண்டும் என்று பரக்கைட்சேர் கோல்பாட் உட்பட பல சமூக அமைப்புக்கள் அரசாங்கத்திடம் வேண்டுதலை விடுத்து இருக்கின்றது.
இந்நிலையில் ஜெர்மனியின் தொழில் அமைச்சர் ஊபேர்ட் அயள் அவர்கள் வருகின்ற வருடம் தொடக்கம் சமூக உதவி பணத்தில் உயர்ச்சியை ஏற்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.