துருக்கியின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து : 12 பேர் படுகாயம்!

துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 12 ஊழியர்கள் லேசான காயம் அடைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
துருக்கிய பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனமான TUPRAS, Kocaeli மாகாணத்தில் உள்ள Izmit இல் உள்ள அதன் வசதிகளில், ஒரு கம்ப்ரஸரில் பராமரிப்பு பணியின் போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நிறுவனத்தின் சொந்த பணியாளர்களால் தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, உதவிக்கு எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
போர்சா இஸ்தான்புல் பங்குச் சந்தை TUPRAS பங்குகளின் வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
(Visited 32 times, 1 visits today)