இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் தலவுட் தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று (10) பிற்பகல் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரிக்டர் அளவில் 6.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதென ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் சுமார் 77 கிலோமீற்றர் (47.85 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




