மிகவும் அரிதான நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய சிறுமி
அவுஸ்திரேலியாவில் பெல்லா மேசி என்ற 10 வயது சிறுமிக்கு உலகிலேயே அரிதான நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோய் சிறுமியின் வலது காலை பாதித்துள்ளது, அவள் நகரும் போது மற்றும் கால் தொடும் போது அவரது கால் முழுவதும் கடுமையான வலி ஏற்படுகிறது.
ஃபிஜியில் விடுமுறைக்காக குடும்பம் சென்றிருந்தபோது சிறுமிக்கு வலது காலில் கொப்புளம் ஏற்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் அவருக்கு நரம்பியல் தொடர்பான சிக்கலான பிராந்திய வலி நோய்க்குறி (CRPS) இருப்பது தெரியவந்தது.
மருத்துவ உலகில் இது மனிதகுலம் அறிந்த மிகவும் வேதனையான நிலை என்றும், தீவிர வலியை ஏற்படுத்தும் அரிய நோய் என்றும் கூறப்படுகிறது.
பெல்லாவின் உடலில் வலி இருக்கும் இடங்களை விவரிக்கும் போது, “என் கால் பயங்கரமாக எரிகிறது. என்னால் குளிக்க முடியாது. என் காலின் எந்தப் பகுதியையும் என்னால் தொட முடியாது.”
பாடசாலைக்குச் செல்வது, விளையாடுவது போன்ற குழந்தைத்தனமான செயல்கள் மட்டுமின்றி, பேன்ட் அணிவது போன்ற அன்றாடச் செயல்களையும் அவரால் செய்ய முடிவதில்லை.
அவுஸ்திரேலியாவில் சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காததால், பெல்லாவும் அவரது தாயும் அரிசோனாவில் உள்ள ஸ்பெரோ கிளினிக்கில் மருத்துவ ஆலோசனையைப் பெற்று GoFundme இணையதளம் மூலம் சிகிச்சைக்காக பணம் திரட்ட முயன்றனர்.
“இந்தச் சிறுமி தனது குழந்தைப் பருவ மகிழ்ச்சியை இழந்துவிட்டாள், மேலும் அவளது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும் நோயினால் கடுமையான வலியுடன் போராடுகிறாள். அவளது வலது கால் மற்றும் இடுப்பு அசைவதை நிறுத்திவிட்டன.
அவள் இப்போது பெரும்பாலும் படுத்த படுக்கையாக இருக்கிறாள். வீட்டைச் சுற்றிச் செல்வது கூட சக்கர நாற்காலியின் தயவில்தான்” என்று GoFundMe சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.