வாக்குவாதம் முற்றி மாணவனின் கழுத்தில் ஆழமாக குத்தப்பட்ட ஊசி!
பொல்பெத்திகம நிகவெஹெர வித்தியாலயத்தின் 2ஆம் தரத்தில் கல்விகற்க்கும் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை விபரீதத்தில் முடிந்துள்ளது.
பாடசாலை தொடங்கியதும் காலையில் வகுப்பறையில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த கூரிய ஊசியை மாணவர் ஒருவர் மற்ற மாணவரின் கழுத்தில் ஆழமாக குத்தியுள்ளார்.
இதனால் குறித்த மாணவன் வலியால் அலறி துடித்த நிலையில், பாடசாலை அதிபர் மற்றுமொரு ஆசிரியரின் உதவியுடன் மாணவனை மோட்டார் சைக்கிளில் பொல்பெத்திகம ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பொல்பெத்திகம வைத்தியசாலையில் ஊசியை அகற்றுவதற்கு வசதிகள் இல்லாததால் மாணவன் உடனடியாக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மூன்றரை மணித்தியாலங்களின் பின்னர் சத்திரசிகிச்சை மூலம் அந்த ஊசி அகற்றப்பட்டது.
இதையடுத்து குறித்த மாணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குருநாகல் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.