பிரான்ஸ் செல்லும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு ஓர் அறிவித்தல்!
இந்த கோடையில் பிரான்சின் சில பகுதிகளில் விடுமுறைக்கு வரும் இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகள் தங்கள் காரில் மாசு உமிழ்வு ஸ்டிக்கரை ஒட்டாவிட்டால், அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில் Crit’Air ஸ்டிக்கரைக் ஒட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக RAC எச்சரித்துள்ளது.
ஸ்டிக்கரைக் ஒட்டாத வாகன ஓட்டிகளுக்கு 68 யூரோக்கள் (£58) அபராதம் விதிக்கப்படும் எனவும், இது 45 நாட்களுக்குள் செலுத்தப்படாவிட்டால் 180 யூரோக்கள் (£154) ஆக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமரா அடிப்படையிலான அமலாக்கம் கொண்டுவரப்படும் போது அடுத்த ஆண்டு முதல் அபராதம் 750 யூரோக்களாக (£640) உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4.61 யூரோக்கள் (சுமார் £4) விலையுள்ள ஸ்டிக்கரை பிரெஞ்சு அரசாங்க இணையதளத்தில் இருந்து முன்கூட்டியே ஆர்டர் செய்ய வேண்டும். உள்ளூரில் வாங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.