இலங்கையில் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.
தேவையேற்பட்டால் மாத்திரம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் தேர்தல் முடிவுகள் மொத்தமாக வெளியானதன் பின்னர் தேவையேற்பட்டால் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் ஞாயிறு மாலை தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை முதற்கட்டமாக ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இருப்பதாக மேலதிக தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
(Visited 18 times, 1 visits today)