வட அமெரிக்கா

பழுப்பு நிற சிலந்தி கடித்ததால் அமெரிக்க பெண் ஒருவருக்கு நேர்ந்த கதி..!

அமெரிக்காவில் 44 வயது பெண் ஒருவரை விஷம் நிறைந்த சிலந்தி கடித்ததால் முகத்தில் தோல்கள் அழுகிய நிலையில், கடும் அவதி அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில், 44 வயது மதிக்கதக்க பெண், ஜெசிகா ரோக் அட்லாண்டா. இவர் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் வெளியே இருந்த ஒரு பகுதியை சுத்தம் செய்துள்ளார். அப்போது, அங்கு பழுப்பு நிறத்தில் இருந்த சிலந்திகள் அவரின் மேல் விழுந்துள்ளது. பிறகு சுத்தம் செய்துவிட்டு, அவ்விடத்தை விட்டு வெளியேறிய ஜெசிகாவிற்கு, 24 மணி நேரத்திலேயே முகம், கைகள், தொண்டை ஆகிய இடங்களில் தடிப்பு தடிப்பாக வீங்கியுள்ளது.நேரம் செல்ல செல்ல முகத்தில் உள்ள தோல்கள் அழுகிய நிலையை அடைந்துள்ளது.

இந்த பழுப்பு நிற சிலந்தி கடியை பொறுத்தவரை இவை தோல்களை அழுக வைத்தும், புண்களை ஏற்படுத்த கூடிய அளவிற்கு மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது.

ஜெசிகாவுக்கு, முகம் முழுவதும் காயம் ஏற்படுத்தி, தோல்கள் நெருப்பில் பட்டது போன்ற உணர்வையும் ஏற்படுத்தியதாக அவரே தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து தனது GoFundMe பக்கத்தில் தெரிவிக்கையில், ”இதனால், நான் மிகவும் வேதனை அடைந்தேன். என் கண்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த சிலந்தி கடியால்,இவருக்கு கை , கால்களில் உணர்வின்மையும், இயக்கம் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்று அழகான மகள்கள் இவருக்கு உள்ள சூழலில், இதனை சரிசெய்ய நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

தற்போது, இவர் படிப்படியாக குணமாகி வருவதாகவும், கைகள், கால்கள், மார்புகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வலிமிகுந்த அரிப்பு ஒருபுறம் உள்ளதாகவும் ,இவருக்கு நிதி திரட்டும் அமைப்பாளர் மோர்கன் அண்டர்வுட் என்பவர் தெரிவித்துள்ளார்.

இவ்வகையான பழுப்பு வகை சிலந்திகள் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் மட்டுமே காணப்படுகிறது. 0. 5 அடி அங்குலம் நீளம் வரை வளரக்கூடிய இந்த இன சிலந்திகள் கடித்தால், மிகவும் ஆபத்தை ஏற்படுத்த கூடிய நச்சு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 42 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!