தென்கொரியாவில் பயிற்சியின்போது நடந்த அசம்பாவிதம் : 15 பேர் படுகாயம்!

தென்கொரிய போர் விமானம் அசாதாரணமாக குண்டுகளை வீசியதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சியோலுக்கும் வட கொரியாவின் வலுவூட்டப்பட்ட எல்லையான இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்திற்கும் இடையில் அமைந்துள்ள போச்சியோனின் நோகோக்-ரி பகுதியில் இடம்பெற்ற பயிற்சியின் போது இந்த அனர்த்தம் நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சியின் போது ஒரு விமானத்திலிருந்து எட்டு MK-82 குண்டுகள் வீசப்பட்டதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
இந்த விபத்தில் பதினைந்து பேர் காயமடைந்ததாகவும், அதில் இரண்டு பேர் பலத்த காயமடைந்ததாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
அவர்கள் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 3 times, 3 visits today)