இலங்கை

திருமலையில் சாரதியின் தூக்க கலக்கத்தினால் ஏற்பட்ட விபத்து- ஒருவர் படுகாயம்!

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்விபத்து இன்று (20)அதிகாலை இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் சாரதியின் தூக்க கலக்கம் காரணமாக மோதியதில் லொறி முற்றாக சேதமடைந்துள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்ட லொறியின் சாரதி இன்று (20) அதிகாலை உமி ஏற்றி கொண்டு புத்தளம் நோக்கி செல்லவிருந்த நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வளமை போன்று லொறியை நிறுத்திவிட்டு தனது மகன் பாதுகாப்பிற்காக லொறிக்குள் உறங்குவதாகவும் இன்றைய தினம் வீட்டிலேயே உறங்கியதாகவும் லொறியின் உரிமையாளர் தெரிவித்தார்

இதன் போது யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த லொறியின் சாரதியான யாழ்ப்பாணம் எஸ். திலீபன் (38) என்பவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!