கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 88 வயதான கனடிய முதியவர்
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட உலகின் மிகவும் வயது மூத்தவர் என்ற உலக சாதனையை வோல்டர் டவுரோ என்பவர் நிலைநாட்டியுள்ளார்.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வசித்து வரும் 88 வயதான வோல்டருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் சென் மைக்கல்ஸ் வைத்தியசாலையில் 87 வயதாக இருக்கும்பேர்து வோல்டருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆறு மணித்தியாலங்கள் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், ஒரு மாத காலம் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பத்து மாதங்கள் கடந்துள்ளதாகவும் புதிய சிறுநீரகம் நல்ல முறையில் தொழிற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.