இலங்கையில் பரீட்சை எழுதிய 80 வயது முதியவர்! குவியும் பாராட்டு
தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 80 வயது முதியவர் ஒருவர் கணித பாடத்தில் தோற்றியுள்ள்ளார்.
நிமல் சில்வா என்ற பாணந்துறை – கிரிபெரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். இவர் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாவார்.
இந்நிலையில் குறித்த முதியவருக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)