மல்லோர்கா தீவில் 6 ஜேர்மனியர்களால் 18 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி!
ஸ்பெயின் மல்லோர்கா தீவில் 18 வயது இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக 6 ஜேர்மனியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மல்லோர்கா தீவில் பிரபலமான சுற்றுலாத் தலமான பிளாயா டி பால்மாவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் 18 வயது ஜேர்மன் பெண்ணொருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனி சுற்றுலாப் பயணிகள் 6 பேர் அப்பெண்ணை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 20, 21 வயதுடைய இளைஞர்களும் அடங்குவர் என தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினில் சமீபத்திய ஆண்டுகளில் பல கூட்டு பலாத்கார சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.





