200 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிக்கு பொதுமன்னிப்பு
200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் உள்ளிட்ட இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குரலற்றவர்கள் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
சண்முகரத்தினம் சண்முகராஜன் மற்றும் செல்லையா நவரத்தினம் ஆகிய இரு கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளார்.
இங்கு 1996 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்காக செல்லையா நவரத்தினம் என்ற நபருக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனையும், மற்றைய சண்முகரத்தினம் சண்முகராஜன் என்பவர் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படிருந்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட இருவரும் இன்று மாலை சிறையிலிருந்து வெளியே வந்ததாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு கூறுகிறது.