ஐக்கிய அரபு சிற்றரசுகளில் கைதான பங்ளாதேஷ் ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு
ஐக்கிய அரபு சிற்றரசுகளில் வேலை செய்துவந்த பங்ளாதேஷ் ஊழியர்கள் சிலர் ஜூலை மாதம் போராட்டம் நடத்தினர்.அவர்கள் பங்ளாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கண்டித்து அந்நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து 57 பங்ளாதேஷ் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மூவருக்கு ஆயுள் தண்டனையும் 50 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றொருவர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் வந்தவர் என்பதால் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அதிபர் ஷேக் முகம்மது பின் சயித் அல் நஹ்யான், சிறையில் அடைக்கப்பட்ட பங்ளாதேஷ் ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.மேலும் அவர்கள் பங்ளாதேசுக்கு திருப்பி அனுப்பப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு சிற்றரசுகளில் பங்ளாதேஷ் நாட்டினர் அதிக எண்ணிக்கையில் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் பங்ளாதேஷில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதன்பின் அங்கு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.