இலங்கை மீனவர்கள் 15 பேருக்கு மியன்மாரில் பொது மன்னிப்பு
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது.
இதனை மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
15 இலங்கை மீனவர்களும் மியான்மர் அதிகாரிகளால் கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.





