அமெரிக்கா – மெக்சிக்கோவுக்கு இடையில் நல்லுறவு உடன்பாடு

மெக்சிக்கோவின் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயமை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பில் அமெரிக்காவிற்கும் மெக்சிக்கோவிற்கும் இடையிலான குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப்பின் தலைமைத்துவத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள வரி அறிவிப்புகளுடன் உலகளாவிய வர்த்தகப் போர் தொடங்கியிருக்கும் நேரத்தில், மெக்சிக்கோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு நல்ல உறவு நிறுவப்பட்டுள்ளதாக மெக்சிக்கோவின் ஜனாதிபதி தனது X தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளருடனான இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
(Visited 2 times, 1 visits today)