ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் 28 அம்ச கோரிக்கை – உக்ரைனுக்கு உள்ள சவால்!

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள திட்டம் உக்ரைனுக்கு பல சவால்களை கொண்டுவந்துள்ளது. இந்த விடயத்தில் அமெரிக்காவை பகைத்துக்கொள்ளாமல் உக்ரைன் காய் நகர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா முன்வைத்துள்ள 28 அம்ச கோரிக்கைகள் உக்ரைனின் தலையீடு இன்றி  சுயாதீனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மிகப் பெரிய நிலப்பரப்புகளை ரஷ்யாவின் வசம் விட்டுக்கொடுப்பதும் அடங்குகின்றது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) பல முறை நிராகரித்த திட்டங்கள் இந்த 28 அம்ச கோரிக்கைகளில இடம்பெற்றுள்ளன. மறைமுகமாக ரஷ்யாவின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

இந்த திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ( Vladimir Putin) வரவேற்றுள்ளார். அமெரிக்கா,  உக்ரைனையும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளையும் ஒப்புக்கொள்ள வைத்தால் அது “இறுதி அமைதித் தீர்வின் அடிப்படையை உருவாக்க முடியும்” என்று புட்டின் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே ரஷ்யா மீண்டும் படையெடுக்காமல் இருப்பதை உறுதி செய்யும் ஒரு அமைதி தனது நாட்டிற்குத் தேவை என்று ஜெலென்ஸ்கி  கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அமெரிக்காவின் திட்டம் ரஷ்யாவிற்கு சாதகமாகவே இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் 28 அம்ச கோரிக்கைகளில் சில வருமாறு, 

இந்த திட்டம் உக்ரைனின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் என்று கூறுகிறது, அதே நேரத்தில் கிரிமியா மற்றும் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய பகுதிகள் ரஷ்யாவின் பிரதேசமாக அங்கீகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தனது அரசியலமைப்பில் நேட்டோவில் சேரக்கூடாது என்ற உறுதிப்பாட்டைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், எதிர்காலத்தில் உக்ரைன் அனுமதிக்கப்படாது என்ற ஒரு விதியை நேட்டோ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி நேட்டோ படைகள் உக்ரைனில் நிலைநிறுத்தப்படுவது தடைசெய்யப்படும், இது இராணுவ ரீதியாக யாருடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் கியேவின் உரிமையைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராவதற்கான உக்ரைனின் நம்பிக்கையை இந்தத் திட்டம் நிவர்த்தி செய்கிறது. அதேநேரம் மேற்கத்திய நட்பு நாடுகளிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களை பெறலாம்.

ரஷ்யா அண்டை நாடுகளை ஆக்கிரமிக்காது என்றும், உலகின் மிகப்பெரிய இராணுவக் கூட்டணியான நேட்டோ மேலும் விரிவடையாது என்றும் திட்டம் கூறுகிறது.

உக்ரைனில் ரஷ்யாவின் செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற எந்தவொரு கூற்றுக்களையும் அ்ல்லது வாதத்தையும் கைவிடுமாறு இந்த திட்டம் உக்ரைனைக் கேட்டுக்கொள்கிறது.

போரில் பாதிக்கப்பட்ட உக்ரேனியர்கள் தங்கள் துன்பங்களுக்கு இழப்பீடு அல்லது சட்டப்பூர்வ நியாயப்படுத்தலைப் பெறுவதற்கான எந்த வாய்ப்பையும் மறுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 2 times, 3 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!