சீனப் பொருட்களை வாங்க குவியும் அமெரிக்கர்கள் – பதிவிறக்கப்படும் செயலிகள்

அமெரிக்காவில் சீன இணையவர்த்தக செயலிகள் அதிகம் பதிவிறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் Apple சாதனங்களில் அதிகம் பதிவிறக்கப்படும் 11 இணையவர்த்தகச் செயலிகளில் 6 செயலிகள் சீனாவுக்குச் சொந்தமானவையாகும்.
அவற்றுள் Temu, Taobao,Shein, DHgate முதலியன அடங்கும். 350 செயலிகளின் தரவரிசையில் இருந்த DHgate குறிப்பாக சில நாள்களுக்குள் இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது.
சீனாவிலிருந்து வரும் குறைந்த மதிப்புள்ள பொருள்களுக்கு அமெரிக்காவில் வரிக் கழிவு வழங்கப்படுகிறது. எனினும் அடுத்த மாதம் 2ஆம் திகதி நீக்கப்படுகிறது.
வரி நடப்புக்கு வருவதற்குள் அமெரிக்கர்கள் சீனப் பொருள்களை வாங்க விரைகின்றனர். சமூக ஊடகம் இன்னொரு காரணமாகும். ‘விலையுயர்ந்த நிறுவன முத்திரைகளைக் கொண்ட பொருள்கள் உண்மையில் சீனாவில் செய்யப்படுகின்றன என கூறும் பல காணொளிகள் TikTok தளத்தில் குவிந்துள்ளன.
அதில் விற்பனையாளர்கள் விலையுயர்ந்த பொருள்களின் பாகங்களையும் மலிவான பொருள்களின் பாகங்களையும் ஒப்பிட்டுக் காட்டுகின்றனர்.
பாகங்களில் வித்தியாசம் ஏதுமில்லை என்று சொல்லும் அவர்கள் சீன வர்த்தகர்களிடம் பொருள் வாங்கும்படிக் கூறுகின்றனர். வாடிக்கையாளர்கள் சீனச் செயலிகளைப் பதிவிறக்க அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.