உலக மக்களுக்காக 110 லிட்டர் இரத்தத்தை தானம் செய்த அமெரிக்கர்
அமெரிக்காவை சேர்ந்த Henry Bickoff 49 ஆண்டுகளில் சுமார் 110 லிட்டர் இரத்தத்தைத் தானம் செய்துள்ளார்.
110 லிட்டர் என்பது 310 குளிர்பானக் கலன்களுக்குச் சமமாகும். 68 வதாய ஹென்ரி, 1975ஆம் ஆண்டு அவர் முதல்முறையாக ரத்த தானம் செய்துள்ளார்.
அவர் தானம் செய்துள்ள இரத்தம் 693 பேருக்கு உதவியிருப்பதாக நியூயார்க் ரத்த வங்கி தெரிவித்துள்ளது.
கண் மருத்துவருமான ஹென்ரி கல்லூரியில் இருக்கும்போது இரத்த தானம் செய்ய ஆரம்பித்தார்.
“முதல்முறை அனுபவம் வித்தியாசமாக இருந்தது. மயக்கம் வந்தது. ஆனாலும் ரத்த தானம் செய்யும் பழக்கத்தைக் கைவிடவில்லை. உலகத்துக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற வேட்கை இருந்தது. ரத்த தானம் செய்ய அதிக நேரம் எடுக்காது. 2 மாதத்துக்கு ஒருமுறை ரத்த வங்கிக்குச் சென்று ஒரு மணிநேரம் செலவிட்டால் போதும்” என்றார் அவர்.
ஹென்ரியின் ரத்தம் B-negative வகையைச் சேர்ந்தது. அது மருத்துவத்துறையில் அதிகம் தேவைப்படும் ரத்த வகையாக இருக்கிறது.