கிரீஸ் தீவில் அமெரிக்க சுற்றுலாப் பயணி மர்மமான் முறையில் உயிரிழப்பு: மேலும் மூவர் மாயம்
கிரீஸ் நாட்டின் கோர்ஃபு நகருக்கு மேற்கே உள்ள சிறிய தீவு ஒன்றில் காணாமல் போன அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவரின் சடலம் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
அந்த நபரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மாத்ராகி தீவில் உள்ள ஒரு பாறை கடற்கரையில் மற்றொரு சுற்றுலாப் பயணியால் கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிசார் ஆரம்ப விசாரணையைத் தொடங்கினர் மற்றும் மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்க பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும் காணாமல் போன மேலும் மூவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.





