டொனால்ட் டிரம்ப் மீது கடும் கோபம் – வீதிக்கு இறங்கிய அமெரிக்க மக்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பில்லியனர்களின் ஆதரவுடன் வரிகளை விதித்தல், அதிகாரத்தை மீறுதல் மற்றும் பொது சேவைகள் மற்றும் ஜனநாயகத்தை பெரும் பணக்காரர்களிடம் ஒப்படைத்தல் போன்ற நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக இந்த போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இடதுசாரி அமைப்புகளான MoveOn, தொழிலாளர், சுற்றுச்சூழல் மற்றும் பிற முற்போக்கான குழுக்களின் தலைமையில் நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் போராட்டங்களுக்காக 500,000 க்கும் மேற்பட்ட மக்கள் வீதிகளில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
முக்கிய போராட்டம் வொஷிங்டன் டி.சி.யில் உள்ள நேஷனல் மாலில் நடைபெற உள்ளது, அங்கு மேரிலாந்தின் ஜனநாயகக் கட்சியினரான ஜேமி ரஸ்கின், புளோரிடாவின் மேக்ஸ்வெல் ப்ரோஸ்ட் மற்றும் மினசோட்டாவின் இல்ஹான் உமர் உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க வரலாற்றில் இதுவே மிகப்பெரிய போராட்டமாக இருக்கும் என்று போராட்ட ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.