அமெரிக்க ஊடகவியலாளர் ரஷ்யாவில் கைது
அமெரிக்க ஊடகவியலாளர் அல்சு குர்மஷேவா ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்,
ரஷ்யாவில் – கசான் நகரில் தனது குடும்பத்தை சந்தித்த பின்னர் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்,
இப்போது அவர் ஒரு வெளிநாட்டு முகவராக பதிவு செய்யத் தவறியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்று அவரது சகாக்கள் தெரிவித்துள்ளனர்
இநிலையில் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
செக் குடியரசில் வசிக்கும் குர்மஷேவா, குடும்ப அவசரத்திற்காக மே மாத இறுதியில் கசானுக்குச் சென்றார். அவள் திரும்பும் விமானத்திற்காக காத்திருந்தபோது தடுத்து வைக்கப்பட்டுள்ளார். , அவருடைய ரஷ்ய மற்றும் அமெரிக்க பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒரு வெளிநாட்டு முகவராகப் பதிவு செய்யத் தவறியதற்காகவும், வெளிநாட்டு அரசாங்கங்கள் சார்பாக தகவல்களைச் சேகரித்ததற்காகவும் அதிகாரிகள் அவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர் என்று உள்ளூர் மாநில செய்தித் தளமான Tatar Inform தெரிவித்துள்ளது.
மேலும் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையின் ஊடகவியலாளர் இவான் கெர்ஷ்கோவிச் மீது, ரஷ்யா குறித்து ரகசிய தகவல்களை உளவு பார்த்ததாக ரஷ்ய புலனாய்வாளர்கள் குற்றச்சாட்டி இந்த மாத தொடக்கத்தில் மாஸ்கோவில் உள்ள நீதிமன்றம் மேல்முறையீட்டை நிராகரித்தது மற்றும் அவரை காவலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட இரண்டாவது அமெரிக்க ஊடகவியலாளர் அல்சு குர்மஷேவா ஆவார்.