திருப்பதி கோயிலுக்கு 9 கோடி நன்கொடை அளித்த அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர்
அமெரிக்காவைச்(America) சேர்ந்த இந்தியர் ஒருவர் திருப்பதி(Tirupati) தேவஸ்தானத்திற்கு ரூ.9 கோடி நன்கொடை அளித்ததாக கோயில் அமைப்பின் தலைவர் பி.ஆர். நாயுடு(PR.Naidu) தெரிவித்துள்ளார்.
“திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டிடங்களின் புதுப்பிப்புக்காக எம். ராமலிங்க ராஜு ரூ.9 கோடி நன்கொடை அளித்தார்” என்று பி.ஆர். நாயுடு X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ராமலிங்க ராஜு நன்கொடை வழங்குவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக 2012ல் 16 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாக நாயுடு தெரிவித்துள்ளார்.
பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதில் பங்களித்ததற்காக தேவஸ்தானம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட நாயுடு, ராஜுவுக்கு தெய்வத்தின் ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்திப்பதாகக் தெரிவித்துள்ளார்.




