ஆப்கானிஸ்தானில் சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்க பிரஜை விடுதலை!
ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கைதி ஒருவரை தலிபான்கள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு நாட்டு உறவுகளை இயல்பாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக கைதிகள் பரிமாற்றம் குறித்த உடன்பாடு எட்டப்பட்டது. இதன் அடிப்படையிலேயே குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமீர் அமிரி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குறித்த நபர் டிசம்பர் 2024 முதல் ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தற்போதும் தலிபான் தடுப்புக்காவலில் மேலும் நான்கு நபர்கள் சிக்குண்டுள்ளனர். அவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அமெரிக்க குடிமக்களை விடுவிப்பதற்கு பிரதியீடாக தலிபான்கள் என்ன பெறுகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
(Visited 2 times, 1 visits today)





