அமெரிக்க விமானத்தில் தீ விபத்து – காயமின்றி உயிர் தப்பிய 172 பயணிகள்
அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிலிருந்த 172 பயணிகளும் ஊழியர்களும் அவசரச் சறுக்குப் பாதையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதன் விமான இறக்கையின் மீது பயணிகள் நின்று கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
டாலஸ் செல்லவிருந்த விமானத்தின் இயந்திரத்தில் அதிர்வு ஏற்பட்டதால் டென்வருக்குத் திருப்பிவிடப்பட்டதாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாக அமைப்பு குறிப்பிட்டது.
நுழைவாயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்தது. நெருப்பு அணைக்கப்பட்டுவிட்டது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





