அமெரிக்கா விரைவில் திவால் ஆகிவிடும் – எலான் மஸ்க் எச்சரிக்கை
அமெரிக்காவின் கடன் அதிகரித்து வரும் நிலையில், எலான் மஸ்க் இதுகுறித்து பேசியிருக்கிறார்.
அமெரிக்காவின் நிலைமை இப்படியே போனால், அமெரிக்கா விரைவில் வீழ்ச்சியை சந்திக்கும் என்று பேசியுள்ளார்.
“அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாகக் குறைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாடு விரைவில் திவால் ஆகிவிடும்.” என்று எச்சரித்திருக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தலில் பங்கேற்கப்போவதில்லை என்ற செய்திகளை அடுத்து, அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிடப்போவதாக செய்திகள் வந்தன. இதனையடுத்து டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக கமலா ஹாரிஸே களமிறங்கவுள்ளார்.
ட்ரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் ட்ரம்பின் பிரச்சார குழுவினருக்கு நிதி உதவி அளித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.