இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

இஸ்ரேலுக்காக 12 நாட்களில் $800 மில்லியன் செலவிட்ட அமெரிக்கா

ஈரான் அணுஆயுதம் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது. முதலில் ஈரான் மறுத்த நிலையில், பின்னர் ஒப்புக்கொண்டது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் இந்த மாதம் மத்தியில் திடீரென இஸ்ரேல் ஈரானின் அணுஆயுத திட்டத்தில் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, ஈரான் மீது அதிரடி தாக்குதல் நடத்த தொடங்கியது.

இதற்கு பதிலடியாக ஈரான் அதிநவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதனால் போர் மூண்டது. 12 நாட்களாக நடைபெற்ற போர் பின்னர் நிறுத்தப்பட்டது.

இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வந்தது. ஏவுகணைகளை இடைமறித்து அளிக்கும் THAAD (Terminal High Altitude Area Defense) அல்லது மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தை இஸ்ரேலில் குவித்தது.

ஈரான் ஏவுகணைகளை இந்த THAAD ஏவுகணைகள் இடைமறித்து அளித்தன. ஈரான் காத்ர், இமாத், கெய்பர் ஷேகன், பட்டா-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இவற்றை 60 முதல் 80 முறை அமெரிக்காவின் THAAD ஏவுகணை சிஸ்டம் இடைமறித்து அளித்ததாக ராணுவ கண்காணிப்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் THAAD சிஸ்டத்தை பயன்படுத்த 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவாகும். 12 நாட்களாக நடைபெற்ற சண்டையில் அமெரிக்கா ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அளிக்க 810 மில்லியன் முதல் 1.215 பில்லியன் டாலர் வரை செலவு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி