எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றிய அமெரிக்கா – கடும் கோபத்தில் ரஷ்யா
எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் செயலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஈடுபட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
நெடுந்தொலைவு ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பாய்ச்ச அமெரிக்கா அனுமதி அளித்திருக்கிறது. எனினும் அது குறித்து இன்னும்அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
அவற்றைப் பயன்படுத்தும்போது உண்மை தெரியவரும் என்று உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார். ஏவுகணைகளே இனி பேசும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கர்ஸ்க் வட்டாரத்தின் சிறு பகுதிக்குள் நெடுந்தொலைவு ஏவுகணைகளைப் பாய்ச்ச உக்ரேனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்திருப்பதாகத் தெரிகிறது.
அங்கு வட கொரியப் படையினரை ரஷ்யா நிறுத்திய கோபத்தில் அமெரிக்கா அவ்வாறு முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்க நெடுந்தொலைவு ஏவுகணைகளை உக்ரேன் தனது நாட்டுக்குள் பாய்ச்சினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.