போர் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக தயாராக இருக்கும் அமெரிக்கா!

போர் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரூபியோ தெரிவித்துள்ளார்.
பாரிஸில் ஐரோப்பிய கூட்டாளிகளுடனான சந்திப்பைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
வரும் நாட்களில் முன்னேற்றத்திற்கான தெளிவான அறிகுறிகள் தென்படாவிட்டால், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளில் இருந்து அமெரிக்கா விலகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் இன்னும் அமைதியைப் பின்தொடர்வதில் ஆர்வமாக உள்ளார், ஆனால் உலகம் முழுவதும் அமெரிக்காவிற்கு வேறு பல முன்னுரிமைகள் உள்ளன என்று அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரி மேலும் கூறினார்.
ஒரு ஒப்பந்தம் செய்யப்படலாம் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் நிர்வாகத்திற்குத் தேவை என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.