உலகம் செய்தி

அமெரிக்காவில் உச்சக்கட்ட நெருக்கடி நிலை – 4.2 கோடி அமெரிக்கர்கள் பாதிக்கப்படும் அபாயம்

அமெரிக்காவில் அவசர நிதியைப் பயன்படுத்தி துணை ஊட்டச்சத்து உதவித் திட்டத்தின் (Supplemental Nutrition Assistance Program) சலுகைகளை ஓரளவு ஈடுகட்ட இரண்டு கூட்டாட்சி நீதிபதிகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால், ஒரு மாத கால அரசாங்க முடக்கத்திற்கு மத்தியில், 5.3 பில்லியன் டொலர் அவசர நிதியைப் பயன்படுத்தி சலுகைகளை ஈடுகட்ட முடியாது என்று வேளாண் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிடைக்கக்கூடிய பணத்தில் சிலவற்றைக் கொண்டு துணை ஊட்டச்சத்து உதவித் திட்டத்திற்கு பணம் செலுத்த சட்டப்பூர்வ அதிகாரம் தங்களுக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் சலுகைகளை எவ்வாறு சட்டப்பூர்வமாக நிதியளிப்பது என நீதிமன்றத்திடம் கேட்குமாறு தனது வழக்கறிஞர்களுக்கு ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

உடனடி வழிகாட்டுதல் வழங்கப்பட்டாலும், மாநிலங்கள் பணம் பெறும் வரை அது தாமதமாகும் என்றும் ட்ரம்ப் தனது வலைத்தளத்தில் பதிவிட்டார்.

நவம்பர் மாதத்தில் இந்த சலுகைகளை முழுமையாக செலுத்த அமெரிக்க வேளாண்மைத் துறை கிட்டத்தட்ட 26 பில்லியன் டொலர் நிதியைப் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முடிவு நிர்வாகத்தைப் பொறுத்தது என்று இரண்டு நீதிபதிகளும் கூறினர்.

எனினும் இந்த உத்தரவுகள் லட்சக்கணக்கான துணை ஊட்டச்சத்து உதவித் திட்டப் பயனாளிகளுக்கு பணம் பெறுவதை தாமதப்படுத்தக்கூடும், மேலும் அமைச்சகம் மற்றும் மாநில அரசுகள் பணத்தை வெளியிட நேரம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு முடக்கம் ஏற்பட்டு 3 வாரங்கள் கடந்துவிட்டது. இந்த நிலையில், இது நீடித்தால் அமெரிக்காவில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கிவரும் சலுகையான துணை ஊட்டச்சத்து உதவித் திட்டம் முடங்கும் சூழல் ஏற்படும்.

நவம்பரில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நிதியில்லை என்று வேளாண் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், இதை நம்பியுள்ள 4.2 கோடி அமெரிக்கர்கள் இந்த உதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

(Visited 6 times, 6 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!