இருண்ட இடத்தில் அமெரிக்கா – சாடும் ஒபாமா!
“நமது நாடும் நமது கொள்கையும் இப்போது மிகவும் இருண்ட இடத்தில் உள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா விமர்சித்துள்ளார்.
வர்ஜீனியா (Virginia) மற்றும் நியூ ஜெர்சி (New Jersey) ஆகிய மாநிலங்களுக்கான ஆளுநர் வேட்பாளர் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எங்கிருந்து தொடங்குவது என்று தெரிந்து கொள்வது கடினம். ஏனென்றால் வெள்ளை மாளிகையானது ஒவ்வொரு நாளும் பொறுப்பற்ற முறையில் செயற்படுகிறது. மோசமான மனநிலை மற்றும் பைத்தியக்காரத்தனத்தையே மேற்கொள்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ட்ரம்பின் கட்டணக்கொள்கை மற்றும் அமெரிக்க நகரங்களுக்கு தேசிய காவல்படை துருப்புக்களை அனுப்புவதையும் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் ட்ரம்ப் அமெரிக்க கட்டுப்பாடுகளுக்கு வெளியே இருக்கிறார் என்பதை அறிந்தாலும் கூட அவரை கட்டுப்படுத்துவதை தவறியமைக்காக காங்கிரஸையும் கடுமையாக சாடியுள்ளார்.





