கருத்து & பகுப்பாய்வு செய்தி

ரஷ்யாவை சீண்டிய அமெரிக்கா : அதிகரித்து வரும் போட்டியால் சுடுகாடாகும் பூமி!

உலக நாடுகளுக்கு மத்தியில் தற்போது போர் என்ற சொல்லாட்சி பிரபல்யமான ஒரு விடயமாக மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு வகையில் போர் நடவடிக்கைகள் உச்சம் தொட்டுள்ளன.

ஒரு பக்கம் சீனாவிற்கும் – அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக போர் அதிகரித்து வருகிறது. மறுபக்கம் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் மூன்றாம் உலகப் போர் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது.

மத்திய கிழக்கில் அமைதி ஒப்பந்தங்களை மீறி இஸ்ரேல் மீளவும் ஹமாஸ் மீது தாக்குதல்களை நடத்த ஆரம்பித்திருக்கிறது. இந்த போர் நிறுத்த பேச்சுவார்தைகள் சில போர்களை முடிவுக்கு கொண்டுவந்திருந்தாலும், பல நாடுகளின் நீடித்த அமைதிக்கு வெறும் பேச்சுவார்த்தை மாத்திரம் உதவாது என்பதை நாடுகள் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் நிரூபித்துள்ளன.

இவை எல்லாம் சேர்ந்து மூன்றாம் உலகப் போருக்கு வலுவான அஸ்திவாரத்தை இடுவதுபோல் தெரிகிறது.  குறிப்பாக அண்மைய நாட்களில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் அணுவாயுத போர் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளன.  அடுத்தடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ள இரு ஏவுகணைகள் சர்வதேச அரங்கில் மிகப் பெரிய புயலை உருவாக்கியிருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்றைய தினம் 30 ஆண்டுகளாக கைவிடப்பட்டிருந்த அணுவாயுத பரிசோதனையை மீள ஆரம்பிக்குமாறு தனது துருப்புகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ட்ரம்பின் இந்த நடவடிக்கை ரஷ்யாவின் நேற்றைய பரிசோதனைக்கு எதிர்பை வெளியிடும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்பட்டாலும், வெளிப்படையாக தங்கள் வசமும் சக்திவாய்ந்த அணுவாயுதங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்த நாங்களும் தயங்கமாட்டோம் என்பதை வெளி உலகிற்கு பறைசாற்றும் வகையில் தான் அமைந்திருக்கிறது.

இதற்கிடையில் அணுவாயுத போர் என்று வந்துவிட்டால் தற்போது சீனாவும் அதன் பலத்தை மெருகேற்றியுள்ளது. சீனா கடந்த ஐந்து ஆண்டுகளில் அதன் அணு ஆயுதங்களை இரட்டிப்பாக்கியுள்ளது மற்றும் 2030 ஆம் ஆண்டளவில் 1,000 ஆயுதங்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் சொந்த அணு ஆயுதக் கிடங்கு சுமார் 5,225 ஆயுதங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் ரஷ்யா தோராயமாக 5,580 ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்று ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

இவையெல்லாம் வெறும் தரவுகள் மட்டும்தான். ஆனால் உண்மையில் எத்தனை  அணுவாயுதங்களை நாடுகள் வைத்திருக்கின்றன என்பது அந்தந்த நாடுகளின் உயர்மட்ட தலைவர்களுக்கு மாத்திரமே தெரிந்திருக்கக்கூடும்.

எது எவ்வாறாக இருந்தாலும் அணுவாயுத தாக்குதல் ஒன்று இடம்பெற்றால்  இந்த உலகம் சுடுகாடாக மாறும் என்பதே நிதர்சனம். தற்போது நாடுகளுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டி நிலபரப்பிற்காகவும், அந்த நிலங்களில் காணப்படும் கனியவளங்களுக்காகவும் தான். ஆனால் இதில் பெரும்பாலான உயிர்கள் பலியாகக்கூடும். அந்த கனிமவளங்கள் பயன்படுத்த முடியாதவையாகக் கூடும். ஆகவே தலைவர்கள் தாங்கள் பிறப்பிக்கும் கட்டளைகள் பிற உயிர்களை காக்கவேண்டும் என்ற கருணையின் அடிப்படையிலும் இருத்தல் வேண்டும்……!

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி