வட அமெரிக்கா

தனக்கு தானே சிக்கலை உருவாக்கிய அமெரிக்கா : நிலை தடுமாறிய பங்குச்சந்தைகள்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று (03.04) இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்தார்.

டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதிக்க தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்புக்கு பிறகு அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல் அடியோடு மாறி வருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் அமெரிக்க பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடைந்தது. பங்குச் சந்தையின் அனைத்து குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் பல லட்சம் கோடியை இழந்தன.

அதேபோல் உலக பங்குச்சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிந்தன.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!