அரசியல் இலங்கை செய்தி

சுதந்திரக்கட்சி யாப்பில் விரைவில் திருத்தம்! சாமரவுக்கு புதிய பதவி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு சிரேஸ்ட உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மற்றும் மத்திய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாப்பை மறுசீரமைப்பது பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

உள் கட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையிலேயே இதற்குரிய ஏற்பாடு செய்யப்படவுள்ளது. தலைவருக்குரிய கூடுதல் அதிகாரங்களும் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!