ஐரோப்பா

பிரித்தானியாவில் வெளிநடப்பு செய்யும் வைத்தியர்கள் : மஞ்சள் எச்சரிக்கைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

பிரித்தானியாவில் ஜுனியர் வைத்தியர்கள் இன்று (27.06) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன்காரணமாக சிகிச்சைக்கு வந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக அவசர நோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெறுபவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜுனியர் வைத்தியர்கள் ஐந்து நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக NHS பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வதாக சுகாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக இங்கிலாந்தில் தற்போது வெப்பநிலை கடுமையாக உயர்ந்து மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் வைத்தியர்களின் வெளியேற்றம் பாரிய சிக்கல்களை கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்