பிரித்தானியாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை
பிரித்தானியாவை ‘கோரெட்டி’ (Goretti) புயல் தாக்கி வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற (Amber) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இப்புயல் காரணமாக மிட்லாண்ட்ஸ் பகுதியில் சுமார் 30 சென்டிமீட்டர் வரை கனமான பனிப்பொழிவு பதிவாகக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 90 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டிகள் காரணமாக சாலைப் போக்குவரத்து, இரயில் மற்றும் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பர்மிங்காம், லெய்செஸ்டர் மற்றும் நாட்டிங்ஹாம் ஆகிய நகரங்களில் பயணங்களைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய இந்தச் சீரற்ற வானிலை மற்றும் கடும் குளிர் காரணமாக, முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.





