WhatsApp இல் அறிமுகமாகும் அசத்தலான அம்சம்!
WhatsApp மிகப்பெரிய அம்சங்களில் ஒன்றான வீடியோ மெசேஜ் அனுப்பும் அம்சத்தை வெளியிட்டுள்ளது.
உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி தளமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான WhatsApp அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை குஷிப்படுத்துவது வழக்கம். இப்போது வரை, மக்கள் ஒரு மெசேஜ்-ஐ டைப் செய்து அல்லது ஆடியோ மெசேஜ்களை அனுப்ப முடியும். இப்போது, வீடியோ மெசேஜ்-ஐ பரிமாறிக்கொள்ள அனுமதிக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் தயாராகி வருகிறது.
இனி ஒரு பயனர் வீடியோ மெசேஜ்களை அனுப்ப முடியும். இருப்பினும், இந்த வீடியோ மெசேஜ் அனுப்பும் முறை, iOS மற்றும் Android-க்கான WhatsApp பீட்டா வெர்சன்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக, WhatsApp செயலில் எடிட் பட்டன், சாட் லாக், மல்டி-போன் சப்போர்ட் உள்ளிட்ட அசத்தலான சம்சத்தை வெளியிட்டு இருக்கிறது.
தற்போது, சோதனையில் இருக்கும் வீடியோ மெசேஜ் அனுப்பும் அம்சம், Meta நிறுவனத்திற்குச் சொந்தமான மெசேஜிங் இயங்குதளமானது, ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.13.4 வெர்சன் மற்றும் iOS பீட்டா 23.12.0.71 வெர்சன்களிலும் இந்த அம்சத்தை சோதித்து வருகிறது. முழுமையான சோதனைக்கு பின், வரும் நாட்களில் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நார்மல் மெசேஜ் மற்றும் ஆடியோ மெசேஜ் போலவே இதையும் எளிதாக இயக்க கூடும். சேட் செய்யும் பொழுது, மைக்ரோஃபோன் ஐகானுக்குப் பதிலாக வீடியோ ஐகான் இணைக்கப்படும். நீங்கள் ஆடியோ அல்லது வீடியோ செய்திகளாக மாற்றிக்கொண்டு உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப முடியும். நீங்கள் அனுப்பும் வீடியோ மெசேஜ்-ஐ மற்றொவருக்கு பார்வேர்ட் செய்ய இயலாது. ஆனால், ஸ்க்ரீன் ரெக்கார்டிங் செய்ய முடியும்.
வழக்கமான டைப் செய்யும் மெசேஜ் மற்றும் ஆடியோ மெசேஜ் போலவே வீடியோ மெசேஜ்களும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படும் என்பதால், அனுப்படும் மெசேஜ்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த அம்சம் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், WhatsApp பயனர்கள் இந்த அற்புதமான அப்டேட்டை விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.