30 நிமிடங்கள் நடந்தால் உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நடை பயிற்சி மிக முக்கியம். அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடை பயிற்சியில் ஈடுபடுவது பல்வேறு உடல்நல பிரச்சனைகளையும் நோய்களையும் தவிர்க்க உதவும்.
இரவு உணவுக்கு பிறகு எவ்வளவு நேரம் நடக்கலாம்?
இரவு உணவு சாப்பிட்டபின், குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும் என்று உணர்வியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். அதனை படிப்படியாக 45 நிமிடங்களாக, அதிகரிப்பதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அடையலாம். எனினும் இரவு நேர நடை பயிற்சியில், அதிவேகத்தில் நடப்பது நல்லதல்ல. மெதுவான சீரான வேகத்தில் நடப்பது சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
இரவில் டின்னருக்கு பின் அரை மணி நேரம் நடப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்
1. நடைப்பயிற்சி அதிக அளவிலான கலோரிகளை எரித்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
2. இரவு உணவிற்குப்பின் நடப்பதால் ரத்த ஓட்டம் மேம்படுவதோடு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துகளை பெருமளவு குறைக்கும்.
3. நீரழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, டின்னருக்கு பின் நடக்க வேண்டியது மிக அவசியம். ஏனெனில் இதில் இன்சுலின் உணர்ந்திறனை அதிகரிக்கிறது.
4. நடைப்பயிற்சி உடலில் ஹாப்பி ஹார்மோன்களை வெளியிடுகிறது. இதனால் மன அழுத்தம், சோர்வு பதற்றம் ஆகியவை பெரும் அளவு குறைகிறது. இது மனதை அமைதியாகவும் ஒருமுகப்படுத்தியும் வைத்துக்கொள்ள உதவும்.
5. நடை பயிற்சி எலும்புகளை வலுவாக்க உதவும். இதனால் மூட்டு வலி, கை கால் வலிகள், முழங்கால் வலி ஆகியவற்றுக்கு குட் பை சொல்லலாம். எலும்பு மெலிதல் என்னும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வருவதை தடுக்க தினமும் நடை பயிற்சி செய்வது உதவும்.
6. நடைப்பயிற்சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுத்துகிறது. இதனால் சளி, காய்ச்சல் போன்ற பருவ கால நோய்களை தவிர்க்கலாம். தொற்றுநோய் பரவலில் இருந்தும் உடலை காத்துக் கொள்ளலாம்.
7. செரிமான பிரச்சனைகளுக்கு குட் பை சொல்ல, இரவு உணவிற்குப்பின் நடக்க வேண்டும். அஜீரணம் நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற வியாதிகளில் இருந்து முழுமையாக விடுதலை பெறலாம்.
8. இரவு உணவிற்குப்பின் அரை மணி நேரம் நடப்பதால், தூக்கமின்மை பிரச்சனை என்பதே இருக்காது. என்ன தூக்கம் கிடைப்பதால், அடுத்த நாளை புத்துணர்ச்சியுடன் தொடக்கலாம்.
9. மூளை சுறுசுறுப்பாக இயங்க, இரவு நேர நடை பயிற்சி உதவும். நினைவாற்றல் மனதெளிவு கவனம் செலுத்தும் அவற்றை அதிகரிக்க, இரவு நேர வாக்கிங் மிக அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
10. இரவு உணவை பொதுவாக இரவு ஏழரை மணிக்குள் சாப்பிட்டு விடுவது நல்லது. சாப்பிட்ட பிறகு, குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கி கொண்டால், உடல் மற்றும் மனநலம் மேம்பட்டு, உங்கள் ஆற்றல் அளவு மிகவும் அதிகரிக்கும்.