கூகுள் குரோமில் அசத்தல் AI வசதி
கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் குரோம் தளம் உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான இன்டர்நெட் ப்ரௌசர் ஆகும்.
இந்நிலையில், குரோம் தளத்தில் ஏ.ஐ ஸ்கேம் டிடெக்ஷன் டூல் என்ற புதிய வசதியை நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது ஏ.ஐ மூலம் மோசடி இணைதளங்களை கண்டறிந்து எச்சரிக்கும் வகையில் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டிங்கரர் Leopova64 என்பவர் தனது X பதிவில் இதுகுறித்து கூறுகையில், கூகுள் குரோமின் கேனரி வெர்ஷனில் “கிளையண்ட் சைட் டிடெக்ஷன் பிராண்ட் மற்றும் இன்டென்ட் ஃபார் ஸ்கேம் கண்டறிதல்” என்ற புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது.
இது பெயர் குறிப்பிடுவது போல, பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. உங்களை ஏமாற்ற முயற்சிக்கும் இணையதளங்களைக் கண்டறிந்து உங்களை எச்சரிக்கிறது என்று கூறியுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்த, குரோமின் கேனரி வெர்ஷனை இன்ஸ்டால் செய்யவும். அதன் பின் “chrome://flags” என address bar-ல் டைப் செய்யவும். இதன் பின் “Client Side Detection Brand and Intent for Scam Detection.” என்று அடுத்த பக்கத்தில் டைப் செய்யவும். பிறகு, இந்த ஆப்ஷனை எனெபிள் செய்வதற்கான பட்டன் இருக்கும் அதை கொடுக்கவும்.