பாராளுமன்றத்தில் அமளி : சபையில் இருந்து இரு எம்பிகள் வெளியேற்றம்!
பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேள்விகள் கேட்கப்பட்ட நேரம் தொடர்பான பிரச்சினை காரணமாக சூடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான நளீன் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை சபையில் இருந்து நீக்குவதற்கு பிரதி சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.
சபையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக, பிரதி சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி, அவையில் இருந்து வெளியே வந்த இரண்டு எம்.பி.க்களும் முகநூல் சமூக வலைத்தளம் மூலம் நேரலையில் கருத்து தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)





