கடற்கரைக்கு செல்ல அனுமதி – உற்சாகத்தில் உக்ரைனியர்கள்

உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய துறைமுக நகரான ஓடொசாவில் 16மாதங்களுக்குப் பிறகு மக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் கடற்படைத்தளம் ஒடொசாவில் அமைந்துள்ளதால் போர் ஆரம்பித்தது முதலே அந்நகரை குறிவைத்து ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன .
தற்போது காலை 8மணி முதல் இரவு 8மணி வரை கடற்கரைக்கு செல்லவும் குளிக்கவும் அம்மாகாண அரசு அனுமதி அளித்துள்ளது.
அந்த கடற்பரப்பில் நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை ரஷ்யப் படைகள் மிதக்க விட்டுள்ளதால் அவை கரை ஒதுங்கிவிடாத வகையில் பாதுகாப்பு வலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
(Visited 14 times, 1 visits today)